Saturday, October 29, 2011

உன்னை விட்டு பிரிகிறேன்


அன்பே
என் காதலின் கண்ணியத்தை
புரிந்து கொல்லாத
தூயவனே!!!
உன் கண்ணாடி இதயம்
இனியும் என்னை
பிரதிபலிக்காது என்ற
எண்ணத்தில் உன்னை
விட்டு பிரிகிறேன்....

உன்னால் எனக்குள்
உண்டான தனிமை
பொழுதுகள் தணியாத
பகைமையை உன்னிடத்தில்
உண்டாக்குவதால்,
உண்மை காதலோடு உன்னை
விட்டு பிரிகின்றேன்....,

காதலே!!!!

விதி வலியது.....
நீ கொடுத்த வலி
அதனினும் கொடியது....

உன்னை விட்டு பிரிந்தாலும்
என்றும் என்னை தொடரும்
உன் காதல் நினைவுகளை
பத்திரமாய் எனக்குள்
விதைத்துக்கொள்கின்றேன்....

உன் கண்ணாடி இதயம்
இனியும் என்னை
பிரதிபலிக்காது என்ற
எண்ணத்தில் உன்னை
விட்டு பிரிகிறேன் ......

Thursday, September 29, 2011

காதல்



காதல்
இது கண்களால் விற்கப்படும்
கஞ்சாத்தூள்
காதல்-
ஒரு பக்கம் பூக்கள்
மறுபக்கம் முட்கள்
விதி கட்டி வைத்துள்ள
விசித்திர மாலை
தேனொரு பக்கம்
விஷமொரு பக்கம்
சேர்ந்து வழிகிற
செந்தாமரை
சாமிகளையே பம்பரமாய்
ஆட்டிப்படைத்த சாட்டை
வேண்டாமென்று
வெளியில் சொன்னாலும்
மறைவாய் மனிதன்
விரும்பி அருந்தும் மது
இளைய உள்ளங்களோடு
போராடவே
மனம்தனின் பாசறையில்
அமுதக்கட்டியில் தயாரிக்கப்பட்ட
ஆயுதம்
கணக்கில்லா மனிதரின்
கண்ணீர் லேகியத்தை குடித்து
சாகாவரம் பெற்றுவிட்டது
கண்களுக்கும் காதலுக்கும்
ஒரே வயது
யாராவது
கங்கையை வேரோடு பிடுங்கி எறியும்
நாளில்...
எந்த விஞ்ஞானியாவது
பூமி கிண்ணத்திலிருந்து
காற்றை சுத்தமாக
கழுவி ஊற்றிவிடும்
நாளில்...
மனிதனை விட்டு காதல்
மரித்துப்போகும்

Monday, July 4, 2011

உன்னவன்


அமைதியாய்
இருக்கும் அந்த வானத்தில்
தனிமையாய் தவிக்கும்
அந்த நிலவை போலதான்
நானும் தனித்து
தவிக்கிறேன்

சத்த மில்லா

இரவில்
சத்தமின்றி அழுகிறேன்
அமைதியின்றி என்னுள் கிடக்கும்
உன் நினைவுகளுடன்

நீ எத்திசை

போனாயோ
அத்திசை நோக்கி
புலம்புகிறேன் இன்றும்
உன்னால் பித்தனாக


இந்த பூமியில்
உன் சுவாசக்காற்று
இருப்பதால் தான்
அதன் எச்சம் பட்டு
உன் நினைவுகளுடன்
இன்றும் உயிர் வாழ்கிறேன்
நான்.............

இப்படிக்கு

உன்னவன்

Saturday, May 21, 2011

நிஜம்


நீ போ என்று சொன்னாலும்
உன் நிழல் உன்னை விட்டு போகாது,
அதை போன்றது தான் என் அன்பும்
ஆனால் என் அன்பு நிழல் அல்ல
நிஜம்

Monday, May 16, 2011

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இரு இரவுகளில் என் இதயம் நனைந்ததை,
இத்தனைக்கும் இந்த இரு நாட்களும்
உன் அன்பை விட
உன் அடக்கு முறைதான் அதிகமாக உணர்ந்தேன் ,
அதில் தான்
நான் ஏங்கும் என் உறவை அறிந்தேன்
தந்தை எனும் உன் தாய்மையை

இந்த உறவு யாருக்கும் கிடைக்காது ..
தந்தையையும் தாயையும்
விலை கொடுத்தும் வாங்க முடியாது,
இழந்தவனுக்கு மட்டுமே புரியும்
அதன் அருமை....!
நான் பாக்கியசாலி
என்பதை நினைத்து பெருமிதம் கொண்டாலும்
பிரிவின் வலிமை கொடியது உன்னை காணாத போது

அண்ணன்கள் அண்ணிமார்கள்,
அக்கா, குழந்தைகள் என
என் குடும்பம் ஒரு பெரிய ஆலமரம்,
அதில் கிடைக்காத விழுதாக
உன் தனி குடும்பத்தில்
என் தனிமையை தனிக்க
தாகம் கொள்கிறேன்

விடுதியில் விடப்படும்
குடும்பம் தொலைத்த குழந்தையாய்
கண்ணீர் சிந்தும்
சிறுவனாகிறேன்,

வயதில் மட்டும் வளந்தவன்
குணத்தில்குழந்தையாய்
என்னை நானே உன்னில்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ...!!!!!



Saturday, May 14, 2011



நீ நேசிப்போருக்கு
உன் இதயத்தில் இடம் கொடு .....
உன்னை மட்டுமே நினைக்கும் இதயத்திற்கு,
உன் உயிரையும் சேர்த்து கொடு...

Friday, May 6, 2011

காதல் யுத்தம்



மகாபாரதத்திலும்
பைபளிலும்,
புனித குரானிலும்
சோதனை காலம் என்று உள்ளது
ஆனால் முடிவோ சாதனை மட்டுமே
அதுவும் சரித்திர சாதனை


இன்று
உனக்கும் எனக்கும் நடக்கும்
மன விரிசலில் விசாரிப்பு எப்படி ...!!!


காதல் யுத்தம்