உன் உடல் சூட்டை தணிக்க
எண்ணெய் எனும் என்னை உடல் முழுவதும் பூசினாய்
உன் உடலை மென்மையாக வருட உன் கை விரலுக்கும்
ஆசையை நான் தானே தூண்டினேன்
நீ பிறந்ததும் உன் தாய் என்னை கொண்டு வந்து உன் உடல் முழுதும் பூசினால் ,,,
அப்போது அவள் சொன்னால் ,,, புள்ளைக்கு இத பூசி வெயில் போட்ட பூப்போல வருவான் என...
இன்று நீ புயல் போல வந்ததற்கு நானும் ஒரு காரணம் தானே ...!!!!
உன்னை உன் சிறுவயதில் இருந்து தாங்கும் என்னை
உன் இளமை பருவத்தில்,,, எண்ணெய் வச்சா முகம் எண்ணையா வழியும் மா என்று நீ என்னை வெறுத்து போகும் போது,,,,
நான் எவளோ வருந்தி உள்ளேன் தெரியுமா ...
உன் உடல் இதற்க்கு முன்பு இப்படி ஒரு மினுமினுப்பு வந்ததில்லை என்று உன் உடலுக்கே ஒரு கர்வம் அப்படி ரசிக்கிறது உன்னையே உன்னை
இவை அனைத்தையும் தந்த என்னை பார்த்து உன் குழந்தை கேக்கிறாள்,,
அப்பா என்ன இது பிசு பிசு நு ,,,, முதலில் குளிச்சிட்டு வாங்கப்பா..... இந்தாங்க சோப்பு ......
நீ என்னை வேண்டாம் என வெறுத்தாலும்
ஏதாவது ஒரு ரூபத்தில் வருவேன்...
உன்னை... என்னை (எண்ணெய்) போல ஒருவன் காதலிக்க முடியுமா ???