வெயில்
கொளுத்தும் வெயிலில் கோவம் பீரிட்டு வீசுகின்றோம் நாம் இருவரும்
இதமான மழையில் இதயம் நனைப்போம்
நீயும் என் அருகில் இல்லை
நானும் உன் அருகில் இல்லை
ஆனால்
நம் இருவரின் மனதும் பின்னி பிணைந்து உள்ளனவே...
நம் கோவம் தீர்ந்ததை அந்த வான் தேவதை அறிந்து
இந்த மழை எனும் வரம் தந்தாலோ
நம் கண்ணின் கண்ணீர் துளியை அறிந்து
அவள் காதல் துளியால் நம்மை குளிர செய்கிறாள்
நம் மனமும்
நம்மை வாழவைக்கும் மண்ணும் குளிர்கின்றது
என்றும் இணைந்தே இருப்போம்
கொஞ்சம் வெயில்
கொஞ்சும் மழை