Monday, April 4, 2011

உன் உறவாகும் உயிர்




முகம் தெரியாமல்
முகவரி புரியாமல்,
இணையத்தில்
நட்பாய் இணைந்தோம்...

சில உரையாடல்களில் சிரிக்க வைத்தாய்...
சில உரையாடல்களில்
சிந்திக்க வைத்தாய்.

பகலிரவு புரியாமல்,
பசித்தூக்கம் அறியாமல்,,
உன் பேச்சால்
என் உலகம் மறக்கவைத்தாய்..
நட்பாய் அறிமுகமாகி,
நாளடைவில்
நட்பின் முகவுரையை
ஏற்க மறுத்தாய்...

வளம் தேடும் இடத்தில் இருந்து
என் நலம் நாடினாய்...
கண்ணுறக்கம் தான் கெடுத்து
உரையாடினாய்...
இனிக்க பேசி
என் இரவை
இனிதாக்கினாய்...

உன்னை என் நண்பன் என நான் நினைத்தேன்
ஆனால் நீயோ ...

உன் இரு பெண்களின் அண்ணனாகவும் ஆதரவு கரம் நீட்டினாய்

இதற்க்கு உன் மனைவி எப்படி சம்மதிப்பார் என நான் கேட்ட போது நீ சொன்னாய் ..
நம் எண்ணங்களுக்கு வளிமை அதிகம் என்று
ஆம் அதை உன் இல்லத்தில் அதும் உன் இல்லத்தரசியிடம் உணர்ந்தேன்

உன் குழந்தைகள் எனக்கு,
என்ன உறவுமுறை சூட்டி அழைப்பது
என்று விளையாட்டை விளையாடும் தருணம்
உன் மனைவியின் மனதின் குரல் வெளி பட்டத்தை நாம் அறிவோம்
ஆமாம் உனக்கு நான் மகன் என்று அவர் திரு வாயால் மலர்ந்தார்
இப்போது நான் என்ன செய்வேன் என்று எனக்கு தெரியவில்லை
உனக்கு ஒரு ஆண்மகனாகவும் நானாகிறேன்

என் கனவுகளுக்கு உருவம் கொடுக்க நினைத்த உன்னை
என் கனவு நாயகனாக மனதில் இடம் கொடுக்க தவற வில்லை
அதே சமயம் உன் கண்ணின் ராதை போன்று உன்மனம் கோணாது நடக்கும் உன் ராதையின் புதல்வனாக நான் வாழ்வேன் ...


உன் ராதை எனக்கு கொடுத்த உணவு எனக்கு பிடிக்காத போதும்
அன்பு என்னும் இனிப்பை அமிர்தமாக தந்த அந்த அமிர்த கரங்களை என் மனம் எப்படி மறக்கும் ..


யாரிடமும் வெகு சீக்கிரத்தில் பழகிவிட மாட்டர்கள் என் குழந்தைகள் என்று நீ கூறும்போது .... நான் உன் குழந்தைகளை தீண்டவே பயந்தேன்

ஆனால் என் பூர்வபந்த உறவு எப்படி விட்டு போகும்...!!!
என் தங்கைகள் என்னை அடையாளம் கண்டுகொண்டதை ..


நான் தான் இந்த உலகில் புதிதாக பூத்த புதுமை பூ
ஆமாம் ஒரு தாய் ஒரு தந்தை இரு சகோதரி என சகலமும் தந்த அந்த இறைவனுக்கு நான் என் செய்வேன் ...!!!!

உன்னை தந்தையாக அடையத்தான்
என் தந்தை அந்த உறவை
என் சிறுவயதிலேயே விட்டு சென்றாரோ ...!!!!

தந்தை இல்லை என்ற என் கண்ணீர் தருணங்களை
உன் கள்ளமில்லா கரங்கள் துடைத்தன....

இவன்
உன் உறவாகும் உயிர்