Tuesday, April 19, 2011

பாஸ்வின்





நான் ஒரு ஓவியனாய் பிறந்திருந்தால்

உன் முகத்தினை வரைந்தே என் கை ரேகை அழிந்திருக்கும்...

ஒரு சிற்பியாய் பிறந்திருந்தால்

உன் உருவத்தினை செதுக்கியே என் உ ளியும் உடைந்திருக்கும்...

ஒரு பாடகனாய் பிறந்திருந்தால்

உன் நினைவுகளை வர்ணித்தே என் குரலும் கரைந்திருக்கும்

அட, ஒரு கவிஞனாய் பிறந்திருந்தால் கூட

உன் காதலை விவரித்தே என் சொற்களும் தீர்ந்திருக்கும்..........

ஆனால்,நானோ,

உன்னைக் காதலிக்க பிறந்து விட்டதால் ,

உன் முகம் பார்க்காத நாட்களிலும்,

உன் பார்வை தீண்டாத கணங்களிலும்,

உன் குரல் கேட்காத கனவுகளிலும்...

ஓவியனில்லா தூரிகையாய்...

சிற்பி தீண்டாத கற்களாய் ....

ஸ்ருதியில்லா ஸ்வரங்களாய்...

சிதறிக் கிடக்கும் சொற்களாய்....

இந்த பாஸ்வின்


தனிமை



தன்னை மறந்து


னி
நி(னி)ன்னை நினைத்து


மை
மையம் கொண்டேன் உன் மனதில்

உன் கரம் தீண்டும் காரம்


உன் மீது உள்ள கோவத்தை நான் யார் மீது காட்டுவேன் ....


மூன்று வேளை உணவை
மூன்று வார்த்தைக்காக இழந்தேன்

உன் குரல் கேக்ககூடாதென்ற என் ஆணவத்தை என் அன்பு அளித்தது
ஆம்,,,, உன் மீது கொண்ட அன்பு என் கோவத்தை கரைத்தது

இன்று காலை உணவோ இரு தோசைகள்
ஆம் உனக்கு பிடிக்குமே இரு தோசைகள்
நம் இரு உயிர் போலவே ....

என் தோழி கேட்டால் சட்னி ரொம்ப காரமா ? என்று
உன் மீது உள்ள காதலில் எந்த காரமும் என் கண்ணீராகவே உணர்ந்தேன்

ஆம் நம் அன்பை விட அந்த காரம் ஒன்றும் காரம் இல்லை
உன் கரம் கொண்டு அந்த கார உணவை என்று உண்பேன் ...!!!!!


விடியட்டும் அந்த ஞாயிறு
உன் கரம் தீண்டும் காரம்