சுதந்திரங்களைப் பேசுபவன் நான்
உன்னிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதில்
எனக்கு அப்படி என்ன ஒரு சுகமோ
வானவெளி தாண்டி
கனவுகளை வளர்த்துக் கொண்டிருப்பவன் நான்
உன் நினைவுகளில் குழி பறித்து
அதில் மனதைப் புதைத்துக் கொள்வதில்
எனக்கு அப்படி என்ன ஒரு சந்தோஷமோ
வேகத்தை விரும்புகிறவன் நான்
உனக்காகக் காத்திருக்கிறேன் இன்று
நிதானமாக அதே விருப்பத்துடன்