நீஎன் அருகில் இல்லா நிமிடங்கள்
என் தனிமை தாய்மை அடையும் நேரம்
நீ என்னுடன் இணைத்திருக்கும் தருணங்கள்
என் தாய்மையின் பேரின்ப நேரம்
ஆம் ஒரு ஆணும் தாய்மை அடைகிறான்
அவனின் உண்மையான அன்பில்
பத்து மாதம் சுமக்கும் அன்னை,
பார்த்ததிலிருந்து பரலோகம் செல்லும் வரை சுமக்கும் அன்பாலன்,
இன்று நிறைமாத கர்ப்பிணியாக
உன்னை சுமந்து நான்
ஆண்மையிலும் ஒரு தாய்மை....