Tuesday, October 5, 2010

என் வாழ்கை




இலங்கையில்
வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
இன்று இந்திய தாய் மடியின் அரவணைப்பில்,


இந்த வாழ்கை எனக்கு கிடைத்தது அதிஸ்ட்டம் தான்
ஆனால்


சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !


சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?



மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?



சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!

4 comments:

  1. // சொந்த மண்ணில்
    சொந்தங்களோடு
    சோறு திண்பவன்
    யாரடா ?
    இருந்தால் அவனே
    சொர்க்கம் கண்டவனடா! //

    ச்சே... என்ன வரிகள்...!!
    அருமை!!!

    ReplyDelete
  2. நன்றி கிரி ....

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. கவலை மேகம் கலை...
    கண்ணீர் மழை துடை..
    காலம் பதில் சொல்லும்,
    விரியும் வசந்தக் குடை..

    ReplyDelete