Monday, April 4, 2011

உன் உறவாகும் உயிர்




முகம் தெரியாமல்
முகவரி புரியாமல்,
இணையத்தில்
நட்பாய் இணைந்தோம்...

சில உரையாடல்களில் சிரிக்க வைத்தாய்...
சில உரையாடல்களில்
சிந்திக்க வைத்தாய்.

பகலிரவு புரியாமல்,
பசித்தூக்கம் அறியாமல்,,
உன் பேச்சால்
என் உலகம் மறக்கவைத்தாய்..
நட்பாய் அறிமுகமாகி,
நாளடைவில்
நட்பின் முகவுரையை
ஏற்க மறுத்தாய்...

வளம் தேடும் இடத்தில் இருந்து
என் நலம் நாடினாய்...
கண்ணுறக்கம் தான் கெடுத்து
உரையாடினாய்...
இனிக்க பேசி
என் இரவை
இனிதாக்கினாய்...

உன்னை என் நண்பன் என நான் நினைத்தேன்
ஆனால் நீயோ ...

உன் இரு பெண்களின் அண்ணனாகவும் ஆதரவு கரம் நீட்டினாய்

இதற்க்கு உன் மனைவி எப்படி சம்மதிப்பார் என நான் கேட்ட போது நீ சொன்னாய் ..
நம் எண்ணங்களுக்கு வளிமை அதிகம் என்று
ஆம் அதை உன் இல்லத்தில் அதும் உன் இல்லத்தரசியிடம் உணர்ந்தேன்

உன் குழந்தைகள் எனக்கு,
என்ன உறவுமுறை சூட்டி அழைப்பது
என்று விளையாட்டை விளையாடும் தருணம்
உன் மனைவியின் மனதின் குரல் வெளி பட்டத்தை நாம் அறிவோம்
ஆமாம் உனக்கு நான் மகன் என்று அவர் திரு வாயால் மலர்ந்தார்
இப்போது நான் என்ன செய்வேன் என்று எனக்கு தெரியவில்லை
உனக்கு ஒரு ஆண்மகனாகவும் நானாகிறேன்

என் கனவுகளுக்கு உருவம் கொடுக்க நினைத்த உன்னை
என் கனவு நாயகனாக மனதில் இடம் கொடுக்க தவற வில்லை
அதே சமயம் உன் கண்ணின் ராதை போன்று உன்மனம் கோணாது நடக்கும் உன் ராதையின் புதல்வனாக நான் வாழ்வேன் ...


உன் ராதை எனக்கு கொடுத்த உணவு எனக்கு பிடிக்காத போதும்
அன்பு என்னும் இனிப்பை அமிர்தமாக தந்த அந்த அமிர்த கரங்களை என் மனம் எப்படி மறக்கும் ..


யாரிடமும் வெகு சீக்கிரத்தில் பழகிவிட மாட்டர்கள் என் குழந்தைகள் என்று நீ கூறும்போது .... நான் உன் குழந்தைகளை தீண்டவே பயந்தேன்

ஆனால் என் பூர்வபந்த உறவு எப்படி விட்டு போகும்...!!!
என் தங்கைகள் என்னை அடையாளம் கண்டுகொண்டதை ..


நான் தான் இந்த உலகில் புதிதாக பூத்த புதுமை பூ
ஆமாம் ஒரு தாய் ஒரு தந்தை இரு சகோதரி என சகலமும் தந்த அந்த இறைவனுக்கு நான் என் செய்வேன் ...!!!!

உன்னை தந்தையாக அடையத்தான்
என் தந்தை அந்த உறவை
என் சிறுவயதிலேயே விட்டு சென்றாரோ ...!!!!

தந்தை இல்லை என்ற என் கண்ணீர் தருணங்களை
உன் கள்ளமில்லா கரங்கள் துடைத்தன....

இவன்
உன் உறவாகும் உயிர்


Sunday, March 27, 2011

என் எண்ணையின் ஏக்கம்





உன் உடல் சூட்டை தணிக்க
எண்ணெய் எனும் என்னை உடல் முழுவதும் பூசினாய்

உன் உடலை மென்மையாக வருட உன் கை விரலுக்கும்
ஆசையை நான் தானே தூண்டினேன்

நீ பிறந்ததும் உன் தாய் என்னை கொண்டு வந்து உன் உடல் முழுதும் பூசினால் ,,,
அப்போது அவள் சொன்னால் ,,, புள்ளைக்கு இத பூசி வெயில் போட்ட பூப்போல வருவான் என...

இன்று நீ புயல் போல வந்ததற்கு நானும் ஒரு காரணம் தானே ...!!!!

உன்னை உன் சிறுவயதில் இருந்து தாங்கும் என்னை
உன் இளமை பருவத்தில்,,, எண்ணெய் வச்சா முகம் எண்ணையா வழியும் மா என்று நீ என்னை வெறுத்து போகும் போது,,,,
நான் எவளோ வருந்தி உள்ளேன் தெரியுமா ...

உன் உடல் இதற்க்கு முன்பு இப்படி ஒரு மினுமினுப்பு வந்ததில்லை என்று உன் உடலுக்கே ஒரு கர்வம் அப்படி ரசிக்கிறது உன்னையே உன்னை

இவை அனைத்தையும் தந்த என்னை பார்த்து உன் குழந்தை கேக்கிறாள்,,
அப்பா என்ன இது பிசு பிசு நு ,,,, முதலில் குளிச்சிட்டு வாங்கப்பா..... இந்தாங்க சோப்பு ......


நீ என்னை வேண்டாம் என வெறுத்தாலும்
ஏதாவது ஒரு ரூபத்தில் வருவேன்...
உன்னை... என்னை (எண்ணெய்) போல ஒருவன் காதலிக்க முடியுமா ???

Friday, October 29, 2010

தாய்








படைக்கிறாள்

காக்கிறாள்
அழிப்பதில்லை
கடவுள் தானே
தாய்














Tuesday, October 5, 2010

என் வாழ்கை




இலங்கையில்
வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
இன்று இந்திய தாய் மடியின் அரவணைப்பில்,


இந்த வாழ்கை எனக்கு கிடைத்தது அதிஸ்ட்டம் தான்
ஆனால்


சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !


சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?



மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?



சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!

Thursday, September 23, 2010

தோழா




ஒரு மலை நேரம்
நானோ மருத்துவ மனையில் நோயில் சிதைந்துகொண்டு இருந்த வேலை
நீயோ என்னுடன் முதல் முறை பேசும் ஆவலில்


நன் உன்னிடம் பேசிய முதல் வார்த்தை மன்னித்துக்கொள் உன்னுடன் பேசும் நிலையில் நான் இல்லை


இன்று உன்னை பற்றி நானும் என்னை பற்றி நீயும் அறிந்தோம் புரிந்தோம்
உனக்கென்றால் துடிக்கிறது என்னை அறியாமல் என் இதயம்

என் இதையத்தை எனக்கு தெரியாமல் வாடகைக்கு எடுத்து கொண்டாயே..?
உனக்கு யார் அந்த அனுமதி கொடுத்தது ....!!!!


இதற்க்கு பெயர் தான் கண்ணியமான காதல் என்பதா.....
ஆம் காதலையும் கடந்தது நம் நட்பு

Wednesday, September 22, 2010

பசி



பசி என்ற நோய் இல்லை என்றால்

பிறந்த குழந்தையும்

தன் பெற்ற தாயை மறந்து விடும்

காற்றுக்கும் காதல் உண்டு


இலைகளின் மேல்!


நிலவுக்கும் காதல் உண்டு


வானத்தின் மேல்!


பனித்துளிக்கும் காதல் உண்டு!


புற்கள் மேல்!


வண்டுக்கும் காதல் உண்டு


மலர்களின் மேல்!


நண்பர்களுக்கும் காதல் உண்டு


நட்பின் மேல்!


எனக்கும் காதல் உண்டு

உன் மேல்.............