Saturday, April 30, 2011

கோபம்




உன்னிடம் நான் கொள்ளும் கோபம்
சூரியனிடம் மறையும் பனித்துளி போன்றது


உன் புதுமையான புன்னகையில்
என்னை நான் மறப்பேன்

நரக தேசமாகும் காதல்


இரவென்றால்
இனிமையானதொரு
கனவு தோஷம் என்று அறிந்தவன்

காதலித்து பார் அது உனக்கு நரக தேசமாகும்
என்பதை அறியவைத்தாய் நீ


கஸ்டமர் கேர்


உன் அழைப்பு வராதா
என ஏங்கும் ஒவ் ஒரு நொடியும்
எனக்கு வரும் அழைப்புமணியை
அரவனைகிறேன்....
அவை "கஸ்டமர் கேர்" எனும் கயவன்


நான் நினைக்கிறேன்
என்னை" உன்னைவிட அவன் தான் அதிக அன்பு செய்கிறானோ...!!!!
நீ கொடுக்க வேண்டும்
என நினைக்கும் அனைத்து தொல்லைகளையும்
அவன் தான்
நொடிக்கொருமுறை தருகிறான்

உள் மனது உணர்த்தும் உன் அன்பை
இப்படியே சொல்லி என் மனதையும் தேற்றும்


Friday, April 29, 2011

நாளைய இரவு




ஒவ் ஒரு இரவும் என்னை கேள்வி கேட்க்கிறது
நாளைய இரவு எப்போது வருமென

உன்னை சந்திக்கும் இரவை நினைத்து












என்னை சுற்றி
உறவுகள் பல இருந்தும் ...!!!
வெறுமையை உணர்த்தும் உந்தன் பிரிவு






உனக்காக


இறந்திட சொல்லும்
என் இதயம் ..!!!
உன் நினைவுகளுடன்
வாழ்ந்திடவும் சொல்லுதடா...!!!


Wednesday, April 20, 2011



வெயில்
கொளுத்தும் வெயிலில் கோவம் பீரிட்டு வீசுகின்றோம் நாம் இருவரும்


இதமான மழையில் இதயம் நனைப்போம்

நீயும் என் அருகில் இல்லை
நானும் உன் அருகில் இல்லை
ஆனால்
நம் இருவரின் மனதும் பின்னி பிணைந்து உள்ளனவே...

நம் கோவம் தீர்ந்ததை அந்த வான் தேவதை அறிந்து
இந்த மழை எனும் வரம் தந்தாலோ


நம் கண்ணின் கண்ணீர் துளியை அறிந்து
அவள் காதல் துளியால் நம்மை குளிர செய்கிறாள்

நம் மனமும்
நம்மை வாழவைக்கும் மண்ணும் குளிர்கின்றது

என்றும் இணைந்தே இருப்போம்
கொஞ்சம் வெயில்
கொஞ்சும் மழை