Saturday, October 29, 2011

உன்னை விட்டு பிரிகிறேன்


அன்பே
என் காதலின் கண்ணியத்தை
புரிந்து கொல்லாத
தூயவனே!!!
உன் கண்ணாடி இதயம்
இனியும் என்னை
பிரதிபலிக்காது என்ற
எண்ணத்தில் உன்னை
விட்டு பிரிகிறேன்....

உன்னால் எனக்குள்
உண்டான தனிமை
பொழுதுகள் தணியாத
பகைமையை உன்னிடத்தில்
உண்டாக்குவதால்,
உண்மை காதலோடு உன்னை
விட்டு பிரிகின்றேன்....,

காதலே!!!!

விதி வலியது.....
நீ கொடுத்த வலி
அதனினும் கொடியது....

உன்னை விட்டு பிரிந்தாலும்
என்றும் என்னை தொடரும்
உன் காதல் நினைவுகளை
பத்திரமாய் எனக்குள்
விதைத்துக்கொள்கின்றேன்....

உன் கண்ணாடி இதயம்
இனியும் என்னை
பிரதிபலிக்காது என்ற
எண்ணத்தில் உன்னை
விட்டு பிரிகிறேன் ......

Thursday, September 29, 2011

காதல்



காதல்
இது கண்களால் விற்கப்படும்
கஞ்சாத்தூள்
காதல்-
ஒரு பக்கம் பூக்கள்
மறுபக்கம் முட்கள்
விதி கட்டி வைத்துள்ள
விசித்திர மாலை
தேனொரு பக்கம்
விஷமொரு பக்கம்
சேர்ந்து வழிகிற
செந்தாமரை
சாமிகளையே பம்பரமாய்
ஆட்டிப்படைத்த சாட்டை
வேண்டாமென்று
வெளியில் சொன்னாலும்
மறைவாய் மனிதன்
விரும்பி அருந்தும் மது
இளைய உள்ளங்களோடு
போராடவே
மனம்தனின் பாசறையில்
அமுதக்கட்டியில் தயாரிக்கப்பட்ட
ஆயுதம்
கணக்கில்லா மனிதரின்
கண்ணீர் லேகியத்தை குடித்து
சாகாவரம் பெற்றுவிட்டது
கண்களுக்கும் காதலுக்கும்
ஒரே வயது
யாராவது
கங்கையை வேரோடு பிடுங்கி எறியும்
நாளில்...
எந்த விஞ்ஞானியாவது
பூமி கிண்ணத்திலிருந்து
காற்றை சுத்தமாக
கழுவி ஊற்றிவிடும்
நாளில்...
மனிதனை விட்டு காதல்
மரித்துப்போகும்

Monday, July 4, 2011

உன்னவன்


அமைதியாய்
இருக்கும் அந்த வானத்தில்
தனிமையாய் தவிக்கும்
அந்த நிலவை போலதான்
நானும் தனித்து
தவிக்கிறேன்

சத்த மில்லா

இரவில்
சத்தமின்றி அழுகிறேன்
அமைதியின்றி என்னுள் கிடக்கும்
உன் நினைவுகளுடன்

நீ எத்திசை

போனாயோ
அத்திசை நோக்கி
புலம்புகிறேன் இன்றும்
உன்னால் பித்தனாக


இந்த பூமியில்
உன் சுவாசக்காற்று
இருப்பதால் தான்
அதன் எச்சம் பட்டு
உன் நினைவுகளுடன்
இன்றும் உயிர் வாழ்கிறேன்
நான்.............

இப்படிக்கு

உன்னவன்

Saturday, May 21, 2011

நிஜம்


நீ போ என்று சொன்னாலும்
உன் நிழல் உன்னை விட்டு போகாது,
அதை போன்றது தான் என் அன்பும்
ஆனால் என் அன்பு நிழல் அல்ல
நிஜம்

Monday, May 16, 2011

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இரு இரவுகளில் என் இதயம் நனைந்ததை,
இத்தனைக்கும் இந்த இரு நாட்களும்
உன் அன்பை விட
உன் அடக்கு முறைதான் அதிகமாக உணர்ந்தேன் ,
அதில் தான்
நான் ஏங்கும் என் உறவை அறிந்தேன்
தந்தை எனும் உன் தாய்மையை

இந்த உறவு யாருக்கும் கிடைக்காது ..
தந்தையையும் தாயையும்
விலை கொடுத்தும் வாங்க முடியாது,
இழந்தவனுக்கு மட்டுமே புரியும்
அதன் அருமை....!
நான் பாக்கியசாலி
என்பதை நினைத்து பெருமிதம் கொண்டாலும்
பிரிவின் வலிமை கொடியது உன்னை காணாத போது

அண்ணன்கள் அண்ணிமார்கள்,
அக்கா, குழந்தைகள் என
என் குடும்பம் ஒரு பெரிய ஆலமரம்,
அதில் கிடைக்காத விழுதாக
உன் தனி குடும்பத்தில்
என் தனிமையை தனிக்க
தாகம் கொள்கிறேன்

விடுதியில் விடப்படும்
குடும்பம் தொலைத்த குழந்தையாய்
கண்ணீர் சிந்தும்
சிறுவனாகிறேன்,

வயதில் மட்டும் வளந்தவன்
குணத்தில்குழந்தையாய்
என்னை நானே உன்னில்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ...!!!!!



Saturday, May 14, 2011



நீ நேசிப்போருக்கு
உன் இதயத்தில் இடம் கொடு .....
உன்னை மட்டுமே நினைக்கும் இதயத்திற்கு,
உன் உயிரையும் சேர்த்து கொடு...

Friday, May 6, 2011

காதல் யுத்தம்



மகாபாரதத்திலும்
பைபளிலும்,
புனித குரானிலும்
சோதனை காலம் என்று உள்ளது
ஆனால் முடிவோ சாதனை மட்டுமே
அதுவும் சரித்திர சாதனை


இன்று
உனக்கும் எனக்கும் நடக்கும்
மன விரிசலில் விசாரிப்பு எப்படி ...!!!


காதல் யுத்தம்

தோழி


பணி இடத்தில்
என் மனதில்
பனி பெய்தவள் நீ
ஆம்
என்னுடன் உறவு எனும் பாலத்தில்
இணைந்தவள் போல
இணைபிரியா நம் நட்பு
அதையும் தாண்டி
தாய்மையாக உள்ளதை
நான் மட்டும் உணர்ந்தேன்

நீ என் வருங்கால மனைவியின்
தோழியாக அமையவும்
அந்த வரம் தரும் தெய்வத்திடம்
வரம் கேட்ப்பேன்

நீ என்னுடன் கொண்ட
தாய்பால் போன்ற காதலை
அவள் கலங்க படுதிடாமல் இருக்க ...!!!


வெறுமை


நீ செய்யும் ஒவ் ஒரு செயலும்
எனக்காகவே ....
இருந்தும் என்னை விட்டு
விழகி இருப்பதில்
வெறுமை மட்டுமே எனக்கு




Tuesday, May 3, 2011

தோல்வி




"தோல்வி எனக்கு புதிது அல்ல!...

ஆனாலும், துவண்டு கிடக்கிறேன்!..
இந்த ‘காதலில்’ மட்டும்”..



முகப்பரு



காதலின் தயக்கங்களை
என் செவ்வாயில்
அடைக்கி வைத்ததின் விளைவு

உன் முகம் காண தவிக்கும்
என் முகத்தில்
முகப்பருக்களாக...!!!!!



Monday, May 2, 2011

உனக்காகக் காத்திருக்கிறேன்




சுதந்திரங்களைப் பேசுபவன் நான்
உன்னிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதில்
எனக்கு அப்படி என்ன ஒரு சுகமோ

வானவெளி தாண்டி
கனவுகளை வளர்த்துக் கொண்டிருப்பவன் நான்
உன் நினைவுகளில் குழி பறித்து
அதில் மனதைப் புதைத்துக் கொள்வதில்
எனக்கு அப்படி என்ன ஒரு சந்தோஷமோ

வேகத்தை விரும்புகிறவன் நான்
உனக்காகக் காத்திருக்கிறேன் இன்று
நிதானமாக அதே விருப்பத்துடன்

Saturday, April 30, 2011

கோபம்




உன்னிடம் நான் கொள்ளும் கோபம்
சூரியனிடம் மறையும் பனித்துளி போன்றது


உன் புதுமையான புன்னகையில்
என்னை நான் மறப்பேன்

நரக தேசமாகும் காதல்


இரவென்றால்
இனிமையானதொரு
கனவு தோஷம் என்று அறிந்தவன்

காதலித்து பார் அது உனக்கு நரக தேசமாகும்
என்பதை அறியவைத்தாய் நீ


கஸ்டமர் கேர்


உன் அழைப்பு வராதா
என ஏங்கும் ஒவ் ஒரு நொடியும்
எனக்கு வரும் அழைப்புமணியை
அரவனைகிறேன்....
அவை "கஸ்டமர் கேர்" எனும் கயவன்


நான் நினைக்கிறேன்
என்னை" உன்னைவிட அவன் தான் அதிக அன்பு செய்கிறானோ...!!!!
நீ கொடுக்க வேண்டும்
என நினைக்கும் அனைத்து தொல்லைகளையும்
அவன் தான்
நொடிக்கொருமுறை தருகிறான்

உள் மனது உணர்த்தும் உன் அன்பை
இப்படியே சொல்லி என் மனதையும் தேற்றும்


Friday, April 29, 2011

நாளைய இரவு




ஒவ் ஒரு இரவும் என்னை கேள்வி கேட்க்கிறது
நாளைய இரவு எப்போது வருமென

உன்னை சந்திக்கும் இரவை நினைத்து












என்னை சுற்றி
உறவுகள் பல இருந்தும் ...!!!
வெறுமையை உணர்த்தும் உந்தன் பிரிவு






உனக்காக


இறந்திட சொல்லும்
என் இதயம் ..!!!
உன் நினைவுகளுடன்
வாழ்ந்திடவும் சொல்லுதடா...!!!


Wednesday, April 20, 2011



வெயில்
கொளுத்தும் வெயிலில் கோவம் பீரிட்டு வீசுகின்றோம் நாம் இருவரும்


இதமான மழையில் இதயம் நனைப்போம்

நீயும் என் அருகில் இல்லை
நானும் உன் அருகில் இல்லை
ஆனால்
நம் இருவரின் மனதும் பின்னி பிணைந்து உள்ளனவே...

நம் கோவம் தீர்ந்ததை அந்த வான் தேவதை அறிந்து
இந்த மழை எனும் வரம் தந்தாலோ


நம் கண்ணின் கண்ணீர் துளியை அறிந்து
அவள் காதல் துளியால் நம்மை குளிர செய்கிறாள்

நம் மனமும்
நம்மை வாழவைக்கும் மண்ணும் குளிர்கின்றது

என்றும் இணைந்தே இருப்போம்
கொஞ்சம் வெயில்
கொஞ்சும் மழை

ஓடிப்போலாமா ?






காதல்
கதைகளில் மூழ்குகிறேன்
காதல் கவிதைகளில் கலங்குகிறேன்
காதல் படங்களில் பதறுகிறேன்
காதல் பாடல்களில் பயணிக்கிறேன்



திக் திக் திக் திக்


என்ன இது







என் தாயின் இதய துடிப்பு இட வலம் மாறி மாறி அடிக்கின்றது

ஆமாம் என் நிலை அறிந்து என்னை கேக்கிறாள்

நீ கண்டிப்பாக ஓடி போக போகிறாய் என்று



நானோ என் மனதினுள் புன்னகைக்கிறேன்
உங்கள் இருவரையும்
இப்படி உருகி உருகி காதலிக்கும் எனக்கு காதல் புதிதில்லை


என்னோட என் வாழ்க்கைய ஓட்ட ஓடி வரும் ஒருத்தியை
நீங்கள் இருவரும் கை பிடித்து தர ,,, நாம் அனைவரும் சேர்ந்து அந்த சந்தோஷ பயணத்துக்கு ஓடிப்போலாமா ?