Monday, April 18, 2011

தனிமை




நீயும்..? நானும்..?
இந்த உறவுக்கு பெயர் தெரிய வில்லை
தனிமையின் கொடுமையை உணர்ந்தது உண்டா...?

என் மனதை திறந்து பார்
தனிமை எனும் ராட்சசன் என்னை சிறைக்கைதியாக வைத்திருப்பதை
நீ அறிவாய்
அன்று சீதை ராவணனிடம் சிறைபட்டால்
இன்று நானே தனிமை யிடம் சிறைபட்டேன்

இந்த அசோகவனத்தில் என்னை காப்பாட்ற
உன்னை தவிர வேறு ராமனோ, அனுமனோ எனக்கு இல்லை

இது என்ன புது உறவு
என் வயதை பத்து ஆண்டுக்கு முன்னமே கைப் பட்றியவன் நீ
உனக்கும் எனக்கும் எப்படி இப்படி ஒரு நட்பு ...!


எந்த தந்தையும் மகனும் நம்மை போல் வாழ்ந்தார்கள் ?
வாழ்க்கைக்கு புது இலக்கணம் படைப்பவன் நீ
உன்னவளும் உன்னை போலவே உள்ளவளே ......!

இரு சிற்பிக்குள் அடைந்த முத்தை போல நான்,,
இன்று உன்னை விட்டு பிரிந்து,
இந்த பெரிய கடலில் நீந்த தெரியாமல் தவிக்கிறேன்
என்னை மறுபடியும் உன் தாய் மடியில்..!!!!
அதும் அந்த சிற்பிக்குள் அடை பட்டு வாழவே துடிக்கிறது என் மலர்ந்த மனது
.........................



சுதந்திரம் கொடு... சுதந்திரம் கொடு... என்று அனைவரும் கண் சிவந்து கத்தும் போது பாவமாக பார்க்கிறேன் .....
என்னை மட்டும் என் இந்த இறைவன் சுதந்திரமாக படைத்தது எதற்கு என்று
கடவுளின் குழந்தையாக பிறந்ததை எண்ணி வருத்துகிறேன் .....

உன் குழந்தையாக பிறக்க ஏங்குகிறேன்

ஆமாம் இல்லாத ஒன்றுக்கு தானே இந்த மனம் ஏங்கும்

இந்தனை நாட்களாய்
என்னை அடக்கவோ, அடிக்கவோ சிறை படுத்தவோ
அந்த இறைவனுக்கு தைரியம் இல்லை
இன்று உன்னுள் சிறை படவும்,
என்னை அடிக்கவும் அணைக்கவும் ஒரு கரம் உள்ளதை எண்ணி கண் கலங்குகிறேன்
இது ஆனந்த கண்ணீர் தான் ,,,,!!!!!!!

நான் ஏன் இப்படி ஆஹினேன்?
நீ எனக்கு யார் ?
எதற்காக இந்த அன்பு ?


எதற்காக ஒரு நிமிடமாவது
உன்னை மறக்க முடியாமல் கஷ்ட்ட படுகிறது என் மனது ?
பல கேள்விகள்
உன்னையும் என்னையும் கேட்க்கும் ......!!!!!
மனதினுள் தாக்கும் ....!!!!!!!!!

..................................

இவன் உனக்கு சென்ற ஜென்மத்தில் மகனாக பிறந்தவன்
உன் மனைவியின் ஆண் குழந்தை ஏக்கம் போக்க வந்தவன் ..

என்ன இருந்தாலும்
என் மனம் மட்டும் ஏதோ ஒன்றை நினைத்து இன்னும் ஏங்குகிறது
அது என்ன என்று தெரிய வில்லை



..............


என்னை கவிஞ்சன் ஆக்கியது நீ.... நீ... நீ மட்டும் தான்
காதலித்தால் கவிதை வருமாம்
இது சான்றோர் வாக்கு

உன்னை காதலிக்கும் வரம் தந்ததால் நான் இன்று கவிஞ்சன் ஆகுகிறேன்

தனிமையில் இந்த வார்த்தைகளை சிந்தித்து பார் தனிமையின் கைதியாக நீயும் உணர்வாய்
உன்னை சிறை வைக்க அவனுக்கும் வெகு நேரம் ஆஹாது
உன் ஆள் மனதினுள் என் நினைவுகளை அசை போட்டு பார் நீயும் கைதியாக கண்ணீர் வடிப்பாய்

...........

பழக பழக பாலும் புளிக்குமாம்
இது எப்படி சாத்தியமாகும்?

உன்னை கண்ட நாள் முதல் இந்நாள் வரை என் கண்கள் உன் நினைவுகளை தவிர வேறு நிறங்களை ஏற்க மறுக்கிறது
உன் நினைவுகள் இந்த தேவ அமிர்தத்தை விட சுவை அதிகமோ ....?

அது தான் அதை அடைய இத்தனை மன போராட்டங்களோ ...!!!!


காலம் பதில் சொல்லும்

..............


எதற்காக நான் இப்படி வேதனை படுகிறேன்
இது கேலி கூத்தாக உள்ளது
நீ என்னவன்
உன் குடும்பம், நம் குடும்பமே
இருந்தும் ஏன் என்ன புது உணர்வு, ஏக்கம் ?


தனிமை

........................................................

நீ என்னை முதல் முறை கோவப் பட்டு அடித்ததை
ஏதோ வரம் கிடைத்த பக்தனை போல திகைக்க திகைக்க ரசிக்கிறேன்
இன்னொரு முறை எப்போது என்னை உன் கோபக்கரங்கள் தீண்டும்

.................................

ஒரு வார்த்தையில் உன்னை பற்றி ஒரு கவிதை சொல்லவா

தந்தை

No comments:

Post a Comment